NHIS 2026 Employees:
பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 இன் படி பயனாளிகளுக்கான NHIS Identity Card அவர்களது IFHRMS ID விபரங்களில் இருந்து e_Card ஆக வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ( G.O.Ms.No.122 Finance (Health insurance) Department Dated 24.6.2026 (Para No. 14 , Page no 24)
இதன் தொடர்ச்சியாக, 01.07.2026 அன்று நடைபெற்ற இயக்குநரக உயர்நிலைப் பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் (Directorate Review Meeting) ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, அனைத்துப் பணியாளர்களுக்கும் e-ID CARD தடையின்றி வழங்கப்பட ஏதுவாக, அனைத்துப் பணியாளர்களின் e-SR-ல் (எலக்ட்ரானிக் பணிப்பதிவேடு) அவர்களது குடும்ப உறுப்பினர்களின் விவரத்தினை 13-07-2026 - க்குள் முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து வரைவு மற்றும் பட்டுவாடா அலுவலர்களுக்கும் (DDOs) அறிவுறுத்தப்பட்டுள்ளது.